துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நிலை காரணங்களுக்காக கடந்த 22-ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை, மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் துணைத் தலைவருக்கான தேர்தலில் வாக்களிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.