மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று இரவு பிக்கு சௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பாஜக முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,சுவாமி அம்ருதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டிற்கு உரிய ஆதராத்தை வழங்க தவறிவிட்டதாக கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.