மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசுகையில்,
“பாதுகாப்புத் துறை அமைச்சர் நேற்று ஒரு மணி நேரம் பேசினார். பயங்கரவாதம், நாட்டைப் பாதுகாப்பது பற்றிப் பேசிய அவர் வரலாற்றுப் பாடத்தையும் நடத்தி முடித்தார். ஆனால் இதில் ஒரு விஷயம் விடுபட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது? தாக்குதல் நடந்தபோது அங்கு ஏன் ஒரு பாதுகாப்புப் பணியாளர்கூட இல்லை.
மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பொறுப்பல்லவா? 2021-க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. அதற்கெல்லாம் யார் பொறுப்பு?
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததற்கு பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் பதவி விலகினார். அதேபோல பஹல்காம் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத்துறை தலைவர் பதவி விலகுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.