புதுச்சேரியில் தவளக்குப்பத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு விழா நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் என். ரங்கசாமி பங்கேற்று, ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.