பீகாரில் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பாங்கட்வா கிராமத்தில் 2 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்றை சிறுவன் விளையாட்டாக கடித்துள்ளான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது.
இந்த சம்பவத்தை பார்த்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அலறியுள்ளனர். பின்னர் சிறுவனின் கையில் சுற்றிக்கொண்டிருந்த இறந்த நிலையில் இருந்த பாம்பினை அகற்றியுள்ளனர்.
இதையடுத்து 2 வயது சிறுவன் கோவிந்த குமார் இயல்பாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் கோவிந்தகுமாரை அருகில் உள்ள உள்ளூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளது, மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பீகாரில் இரண்டு வயது சிறுவன் ஒரு பாம்பை கடித்து கொன்ற சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.