Tuesday, July 29, 2025

காலில் எலும்பு முறிவு: ரிஷப் பண்ட்க்கு பதிலாக தமிழக வீரர்

மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் இந்திய அணிக்காக மீண்டும் வந்து விளையாடிய பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News