பீகாரில் ஏசி பெட்டியில் ஏறி பயணிகள் முண்டியடித்து கொண்டதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.
டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக மேற்கு வங்கத்திற்கு மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. பீகாரின் கதியார் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், அதில் ஏற பயணிகள் முண்டியடித்து கொண்டனர்.
முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய ஏசி பெட்டியில், போட்டி போட்டு ஏறி அங்கிருந்த இருக்கைகளை ஆக்கிரமித்ததால் முன்பதிவு செய்தவர்கள் அவதி அடைந்தனர்.