கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனா்.
அவர்கள் தங்களது கோரிக்கைகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கர்நாடக அரசும், சுகாதாரத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், ஆகஸ்ட் 1 முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் மாநில சுகாதாரத் துறையின் இயங்குதிறனை கடுமையாக பாதிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.