பழைய மொபைல் வாங்குவது செலவைக் குறைக்கும் நல்ல முயற்சி என்றாலும், அது திருடப்பட்டதாக இருக்கலாம் என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், அந்த சாதனம் மூலம் சட்டரீதியான சிக்கல்களில் சிக்கக் கூடும் ஆபத்து உண்டு.
பழைய மொபைலில் முந்தைய பயனரின் தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்படாமல் இருந்தால், உங்களது தனியுரிமை பாதிக்கப்படுவதால் அது கூட பாதுகாப்பு பிரச்சனையாக மாறும். மேலும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட மொபைலை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் சட்டப்படி தடைபடுத்தப்பட்ட தவறான செயல் ஆகும். இதனை சரிபார்ப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சம்பந்தப்பட்ட மொபைலில் இருந்து *#06# என டயல் செய்தால், திரையில் 15 இலக்க ஐஎம்இஐ (IMEI) எண் தோன்றும். அந்த போனில் இருக்கும் மெசேஜ் (SMS) ஆப்பைத் திறக்கவும். ‘KYM ’ என டைப் செய்து 14422 என்கிற எண்ணுக்கு அனுப்பவும். உதாரணமாக, KYM 123456789012345
சில நிமிடங்களில், அந்த தொலைபேசி பற்றிய தகவலுடன் ஒரு பதில் உங்களுக்கு கிடைக்கும். அந்த பதிலில் “Blacklisted” என இருந்தால், அந்த மொபைல் திருடப்பட்டது என்பதற்கான சான்றாகும்.
உங்கள் பாதுகாப்பிற்காக, எந்த மொபைலையும் வாங்குவதற்கு முன் இந்தப் பரிசோதனையை மறக்காமல் செய்வது நல்லது.