பீகார் மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்காக வழங்கப்படும் ‘பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின்’ கீழ், தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.6,000க்கு பதிலாக ரூ.15,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர் மரணமடைந்தால், அவரது குடும்ப உறுப்பினருக்கு (கணவன்/மனைவி) ரூ.3,000க்கு பதிலாக ரூ.10,000 மாதம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக முதன்மை பங்கை வகிக்கின்றனர். ஓய்வுக்குப் பிறகும் அவர்கள் மரியாதைக்குரிய வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்ய இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பத்திரிகையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.