சமையல் எரிவாயு விலை விண்ணை தொடும் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனாலும் சில டெக்னிக்ஸ்-ஐ follow செய்வதன் மூலம் 30% வரை எரிவாயுவை சேமிக்கலாம். சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே சென்றாலும் ஒரு சில டெக்னிக்ஸ்-ஐ செய்தால் ஒரு சிலிண்டர் 2 மாதத்திற்கு கூட வரும் என்கின்றனர் சிலர்.
உங்கள் Gas Stove-ஐ நல்ல நிலையில் மெயின்டெயின் பண்ண வேண்டியது மிகவும் முக்கியம். அதில் உள்ள burner பழுதாகாமல் வைத்திருந்தால் கேஸ் வீணாவதை வெகுவாக தடுக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை burner-ஐ கவனித்து அதில் தூசிகள் பதிந்திருந்தால் அதனை உடனே சுத்தம் செய்ய வேண்டும். நீலநிறத்தில் ஜுவாலை எரிந்தால் burner நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் Flame வந்தால் அது எரிவாயு வீணாகிறது என்பதற்கான அறிகுறி.
Gas அடுப்பில் சிறிய பாத்திரத்தில் சமைத்தால் கேஸ் வீணாகும். அதேபோல பெரிய burner-ரில் சிறிய பாத்திரம் வைத்தாலும் சமையல் எரிவாயு வீணாகும். எப்போதும் பாத்திரத்தின் அடிப்பகுதி அடுப்பை முழுமையாக மூடும் அளவாக இருந்தால் எரிவாய வீணாவதை நன்றாக குறைக்கலாம். இதனால் 10 நாட்களில் காலியாகும் சிலிண்டர் 20 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.
மூடி வைத்து சமையல் செய்வது மிக முக்கியம். பிரஷர் குக்கர் என்பது LPG சிக்கனத்திற்கு உதவும். இதனால் நேரமும், எரிவாயுவும் 40% வரை சேமிக்க முடியும். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று உணவுப் பொருட்களை சமைத்துக்கொள்ளலாம் என்பதால் எரிவாயு செலவு மிச்சமாகும். சமையல் ஆரம்பிக்கும் முன் தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைக்கவும்.
வெந்நீரை பயன்படுத்துதல், Fridge-ல் இருந்து எடுத்து அப்படியே சமைப்பதை தவிர்த்தல், பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து சமையல் செய்தல் போன்றவை சமையல் செய்யும் நேரத்தை நன்றாகவே குறைக்கும். சமையல் நேரம் குறைந்தால் சமையல் எரிவாயு சேமிக்கப்படும். சோலார் குக்கர் போன்ற மாற்று ஏரிசக்திகள் வீட்டில் இருந்தால், அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது போன்ற tips களை பின்பற்றினால் ஒரு சிலிண்டரை இரண்டு மாதம் வரை கூட பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.