இப்போது அமெரிக்காவில் ஒரு பெரிய மாற்றம் ஆரம்பமாகியுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசும்போது… வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை நியமிப்பதை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான ஏஐ மாநாட்டில், டிரம்ப் ஒரு புதிய பரபரப்பான கருத்தை வெளியிட்டார். அவர் சொல்வது என்னவென்றால் – அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை போன்ற வெளிநாட்டு தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்காமல், உள்நாட்டிலேயே அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
கூகுள், மைக்ரோசாப்ட்” போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுக்கிறது, ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்கிறது! இது ஏற்கக்கூடியதா? என்று நேரடியாகவே கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், இப்போது அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்காக டிரம்ப் அறிவித்திருக்கும் புதிய திட்டம் தான்– “பந்தயத்தில் வெற்றி”. இந்த திட்டம், ஏஐ வளர்ச்சியை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் அமெரிக்கா முதன்மை எனும் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
டிரம்ப் சொல்வது எதார்த்தமாக இருக்கலாம். ஆனால் இந்த முடிவுகள், இந்தியர்களை போன்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக பயம் அல்லது தடையாக மாறக்கூடுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
உலகம் முழுக்க தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போது”நம்மவர்களுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது.
இது எப்படி நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதற்கான பதிலை… பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!