Sunday, August 31, 2025
HTML tutorial

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: இந்தியா எந்த இடத்தில் இருக்குன்னு பாருங்க

குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.

உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.

இந்த பட்டியலின் படி, 2-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3-வது இடத்தில் கத்தார் நாடுகளும் உள்ளன. மொத்தமுள்ள 147 நாடுகளில் குறிப்பாக, இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும் பிடித்துள்ளன.

தெற்காசிய நாடுகளில் சீனா 76.0 புள்ளிகளுடன் 15-வது இடத்தில் உள்ளது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன் ஆகிய நாடுகள் முதல் 5 இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலின் கடைசி இடத்தில் வெனிசுலா இடம்பிடித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News