Thursday, July 24, 2025

உத்தரபிரதேசத்தில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் ஸ்ரீராம் மற்றும் குளோபல் என 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த 2 பள்ளிகளுக்கும் இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், மோப்ப நாய் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

முதல்கட்ட விசாரணையில் கொல்கத்தா நகரில் இருந்து இ-மெயில் வந்துள்ளது என தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிய தொடர்ந்து நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news