உலகில் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இந்த வெள்ளை நிறம் அழகாக இருப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பலர் நினைக்கலாம். ஆனால் இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளது.
வெள்ளை நிறம் சூரிய ஒளியை சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. வெள்ளை நிறத்தில் இருக்கும்போது விமானத்தில் விரிசல்கள் மற்றும் பழுதடைதல் போன்றவை எளிதில் கண்டறிய முடியும்.
விமானப் பகுதியில் உள்ள சிறிய கீறல்கள், விரிசல்கள் கூட வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும். இது தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏதேனும் சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து பழுதுபார்க்க உதவுகிறது.
வானத்தில் வெள்ளை நிறம் தெளிவாகத் தெரியும். எந்த அவசர சூழ்நிலையிலும் விமானத்தைக் கண்டுபிடித்து கண்காணிப்பது எளிது.
மற்ற வண்ணப் பூச்சுகள் சில ஆண்டுகளில் மங்கினாலும், வெள்ளை நீண்ட காலம் நீடிக்கும். இதனால் விமானத்திற்கு பெயிண்ட் அடிக்க வேண்டிய அவசியமில்லை.
வெள்ளை நிறம் அதன் அழகுக்காக மட்டுமல்லாமல், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் எரிபொருள் திறன் போன்ற பல காரணங்களுக்காக விமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.