மகாராஷ்டிரா தலைநகரில் 11 வயது சிறுவனை பிட்புல் நாயை கடிக்கவிட்டு ரசித்த தொழிலதிபர் சோகைல் ஹுசைன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சோகைல் ஹுசைனின் கார் பழுதானதால் அவர் போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த ஆட்டோவில் தனது நாயுடன் ஏறினார். ஆட்டோவில் இருந்த சிறுவர்கள் நாயை பார்த்ததும் கீழே இறங்கியுள்ளனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் மாட்டிக்கொண்டான். அப்போது சோகைல் ஹுசைன் தனது பிட்புல் நாயை அந்த சிறுவனை கடிக்க விட்டு அதனை சிரித்தபடி ரசித்து பார்த்துள்ளார்.
ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தொழிலதிபர் சோகைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சோகைலை கைது செய்தனர். கைதான சில மணி நேரங்களில் சோகைல் ஜாமினில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.