மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மும்பை வழியாக செல்லும் ஏர் இந்தியாவின் AI2744 விமானம் இன்று காலை 9.27 மணியளவில் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
அப்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்று நின்றுள்ளது. இதையடுத்து உள்ளே இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாகவும், ஒரு என்ஜின் ஓடுபாதையில் மோதி சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.