Monday, July 21, 2025

தயாராகும் பிரம்மாண்ட அணை.., சீனாவின் மிகப்பெரிய சதித்திட்டம்

இந்தியா – சீனா இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சனை இருந்து வரும் நிலையில், சீனா தற்போது ஒரு மிகப்பெரிய சதித்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சீனா தனது தென்கிழக்கு திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கும் அளவில் ஒரு மிகப்பெரிய அணையை கட்ட ஆரம்பித்துள்ளது.

இந்திய எல்லைக்கு அருகில், அருணாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து கட்டப்படும் இந்த அணை பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தை தடுக்கக்கூடும். இதனால் இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற கீழ்மட்ட மக்களுக்கு நீர் வழங்கலில் பிரச்சனைகள் உண்டாகும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.

அணைக் கட்டுவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, “சீனாவை எப்போதும் நம்ப முடியாது. அவர்கள் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம். சீனா இந்த அணையை கட்டினால், இந்திய பழங்குடியின மக்கள் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தண்ணீர் வெடிகுண்டாக இந்த அணையை சீனா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த அணையை கட்டி முடித்துவிட்டால், நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும் என்று தெரிவித்திருந்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news