புகைபிடிப்பது உடல்நலத்திற்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் ஒரு தீய பழக்கம். புகைபிடிப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும், மேலும் இது ஒருவரை அடிமையாக்கும்… இதற்காக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது..பழக்கத்தை தரவிறக்க பல வழிகள் உண்டு ஆனால் இங்கே ஒருவர் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..இதனை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
அதாவது துருக்கியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் ,26 ஆண்டுகளாக புகைபிடித்து வருவதாகவும், புகைபிடிப்பதை நிறுத்த பல முயற்சிகள் எடுத்த போதிலும் அவரால் புகைபிடிப்பதை விட்டுவிட முடியவில்லை. எனவே தனது தலையை ஒரு கூண்டில் அடைத்து வைத்தா.
மேலும், அதனின் சாவியையும் மனைவியிடம் கொடுத்து சாப்பிடும் நேரத்தில் மட்டுமே கூண்டைத் திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.தற்போது இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது