Monday, July 21, 2025

இந்தியாவில் மொத்தம் 89,441 அரசு பள்ளிகள் மூடல்.. அப்போ தமிழ்நாட்டின் நிலை என்ன..?

அரசுப் பள்ளி என்பது, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மற்றும் நிதி வழங்கப்படும் ஒரு பள்ளியாகும். இது பொதுவாக கட்டணம் ஏதுமின்றி மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது.. பொதுவாக, இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.இதனை கடந்து தான் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், தற்போது இந்த நிலை மாறி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் அரசுப் பள்ளிகள் அதிகம் உள்ளன.அதற்கடுத்ததாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்த நிலையில், 2014 முதல் 2024ம் ஆண்டு வரை, எவ்வளவு அரசு பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிக அரசுப் பள்ளிகள் உள்ள மத்திய பிரதேச மாநிலம் தான், அதிக பள்ளிகளையும் மூடி உள்ளன. அதாவது, 2014 முதல் 2024ம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் சுமார் 29,410 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றார்,,

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 25,126 பள்ளிகளும், ஒடிசாவில் 10,026 பள்ளிகளும், அசாமில் 7,919 பள்ளிகளும், ஜார்கண்டில் 5,527 பள்ளிகளும், ஜம்மு-காஷ்மீரில் 5,089 பள்ளிகளும், பீகாரில் 3,829 பள்ளிகளும், மகாராஷ்டிராவில் 2,560 பள்ளிகளும், ஆந்திராவில் 1,666 பள்ளிகளும், உத்தரகாண்ட்டில் 1,552 பள்ளிகளும், பஞ்சாபில் 1,530 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன என்கின்றனர்..

சரி, இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று தானே யோசிக்கிறீங்க??

ஆம்,தமிழ்நாடும் உள்ளது..2014 முதல் 2024 வரையில் 239 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

புதுச்சேரிக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான் குறைந்த அளவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர, கேரளாவில் 295 பள்ளிகள், கர்நாடகாவில் 1,180 பள்ளிகள் மற்றும் தெலங்கானாவில் 754 அரசுப் பள்ளிகளை அந்தந்த மாநில அரசுகள் மூடி இருக்கின்றன என்று தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்கட்டும் இதற்கான என்ன காரணம் என்று என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்..

அதாவது, அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகம் பள்ளிகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் அதிகளவில் மூடுவது கிடையாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news