பகல் இரவாக மாறி, உலகம் முழுவதும் இருண்டுவிட்டால் எப்படி இருக்கும்?. அதுவும் 6 நிமிடங்களுக்கு. இதுமாதிரி முன் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இத்தகைய நிகழ்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணம் ஏற்படும். இந்த முழு சூரிய கிரகணம் காரணமாக, பகலில் முழு வானமும் இருளில் மூழ்கும். இதற்கிடையில், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இதுபோன்ற சூரிய கிரகணம் காணப்படாது என்றும் கூறப்படுகிறது.
உலகின் பல்வேறு கண்டங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இந்தக் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், இதுபோன்ற சூரிய கிரகணம் 2114 வரை மீண்டும் காணப்படாது என்ற கூறுகின்றனர்.