2026 ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தற்போது தேர்தல் நடைபெற்றால், தமிழக முதலமைச்சராக யார் வர வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்? என கேட்கப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என 39% பேரும் எடப்பாடி பழனிசாமி என 36% பேரும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் சீமானுக்கு 7% பேரும் விஜய்க்கு 13% பேரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
