2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு எதிரான நிலை உருவாகியுள்ளது. அதாவது, நம் சர்வேபடி, இம்முறை விவசாயிகளின் ஆதரவு அதிமுகவிற்கு அதிகம் காணப்படுகிறது.
திமுக அடுத்து நெருங்கி வந்தாலும், விவசாயிகளின் ஆதரவு அதிமுகவிற்கே. சீமானிற்கும் குறிப்பிடத்தகுந்த அளவு விவசாயிகள் ஆதரவு இருக்கிறது.
