Friday, July 18, 2025

இந்தியாவில் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம் : என்ன காரணம்?

ஆதார் என்பது வங்கி கணக்கு தொடக்கம் முதல் அரசின் பல நலத்திட்டங்கள் பெறுவதற்கும் முக்கியமான அடையாள ஆவணமாகும். இதன் மூலம் மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன என்று ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இது இறந்தவர்களின் ஆதார் எண்கள் ஆகும். இறந்த பதிவு தகவல்களை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து, மரணம் அடைந்தவர்களின் ஆதார் எண்ணுகளை முடக்குவதாக கூறப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆதார் ஆணையம் மேற்கோண்டு வருகிறது. அந்த வகையில் 1.20 கோடி மரணம் அடைந்தவர்களின் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. முறைகேடுகளுக்கு ஆதார் எண்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை தவிர்க்க இந்த நடவடிக்கையை ஆதார் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

W3Schools.com

Latest news