Friday, July 18, 2025

ராணுவமும் இல்லை! ‘போரும் வேண்டாம்’! இந்த ஒரு நாட்டை யாராலும் நெருங்க முடியாது!?

உலகம் முழுக்க பல நாடுகள் தங்களது பாதுகாப்புக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றன. நவீன போர் விமானங்கள், சக்திவாய்ந்த ஆயுதங்கள், ராடார் அமைப்புகள்… இவை அனைத்தும் ஒரு நாட்டின் வலிமையை நிரூபிப்பதற்கான கருவிகளாக பார்க்கப்படுகின்றன.

ஆனால் இந்த உலகில் ஓர் அதிசய நாடு இருக்கிறது… தன்னுடைய பாதுகாப்புக்கு ஒரு “நிலையான இராணுவம்” எதுவும் இல்லாமல், இன்னும் அமைதியாக வாழ்கிறது. அந்த நாடு… ஐஸ்லாந்து!

ஐஸ்லாந்து 1869-ஆம் ஆண்டிலேயே ஒரு பெரிய முடிவை எடுத்தது. “இராணுவம் வேண்டாம்” என்ற துணிச்சலான முடிவே அது. பெரும்பாலான நாடுகள் தங்களது இராணுவங்களை வளர்த்து வரும்போது, இந்த நாடு அமைதியின் வழியைத் தேர்ந்தெடுத்தது.

ஆனால்… அதனால் ஐஸ்லாந்து பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதா? என்றால், இல்லவே இல்ல!
ஐஸ்லாந்து நேட்டோவில் உறுப்பினராக இருக்கிறது. நேட்டோ என்றது என்னவெனில், ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச குழு.

மேலும், இந்நாட்டில் “நெருக்கடி மறுமொழி பிரிவு” என்ற சிறப்பு குழுவும் இருக்கிறது. இவர்கள் ஒரு முழுமையான இராணுவம் அல்ல, ஆனால் தேவைப்படும் நேரத்தில் சீருடை அணிந்து, பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

1951-ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐஸ்லாந்து, அதன் பகுதிகளில் அமெரிக்க இராணுவ தளங்களையும் ஏற்படுத்தியது. அந்த தளம் 2006 வரை இயங்கி, பின்னர் மூடப்பட்டது. ஆனால் அமெரிக்கா இன்னும் ஐஸ்லாந்தை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது.

இன்று, ஐஸ்லாந்து அதன் நேட்டோ நண்பர்களான நார்வே, டென்மார்க் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது. ரேடார் கண்காணிப்பு, வான் பாதுகாப்பு மற்றும் பெரிய பயிற்சிகளிலும் இதில் பங்கு கொள்கிறது. குறிப்பாக, “டைனமிக் மங்கூஸ்” என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.

அங்கு தற்போது புதிய பாதுகாப்பு திட்டங்களும், அதிக முதலீடுகளும் சார்ந்த திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்று பிரதமர் கிறிஸ்ட்ரூன் (Kristrún Frostadóttir)உறுதியாகச் சொல்கிறார்.

இராணுவமே இல்லாத நாடாக இருந்தாலும்… உலக அமைதிக்கு பங்களிப்பைச் செய்யும் முக்கிய நாடாக ஐஸ்லாந்து இருந்து வருகிறது! அமைதியான வழியில்… பலத்தை காட்டும் மிக அழகான எடுத்துக்காட்டாக இந்நாடு அமைந்துள்ளது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

W3Schools.com

Latest news