ஆதார் Card, PAN Card வரிசையில் ஒரு இந்திய பிரஜைக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது வாக்காளர் அடையாள அட்டை. இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அடையாள சான்றாக இருப்பதோடு வாக்களிக்கும் உரிமையையும் உறுதிப்படுத்துகிறது. ஒரு வேளை உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.
சில நேரங்களில் ஏதாவது காரணத்தால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் பதற்றமடைய தேவையில்லை. மிகவும் எளிமையாக வீட்டிலிருந்தே உங்கள் பெயரை மீண்டும் சேர்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் மக்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க உதவும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதாவது ECI ஆன்லைன் மற்றும் offline-னில் option-களை கொடுக்கிறது. அதை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
முதலில் நீங்கள் திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் அதாவது NVSPயின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்ல வேண்டும்.
பிறகு register complaint அல்லது share suggestion-ஐ click செய்யவும். உங்களிடம் அக்கவுன்ட் இல்லையென்றால் புதிய அக்கவுன்ட்டை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே அக்கவுன்ட் இருந்தால் அந்த ஐடி-ஐ வைத்து லாகின் செய்ய வேண்டும்.
தேவையான தகவல்களை குறிப்பிட்டு புகார் படிவத்தை பூர்த்தி செய்து, அதை சப்மிட் செய்ய வேண்டும்.
இந்த வழிமுறையை பயன்படுத்தி உங்கள் பெயரை மீண்டும் வாக்காளர் அடையாள அட்டையில் சேர்க்க முடியும்.
மேலும் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அதே இணையதளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை வைத்து check செய்துகொள்ளலாம்.