கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மெட்டாவுக்குச் சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில், கன்னட மொழிபெயர்ப்பில் தவறு இருக்கிறது. இது போன்ற பிழைகள் உண்மைகளைத் திரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளைப் பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தானது. இதனை சரி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.