மனித தோல் போன்ற தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன் கவர் ஒன்றை பிரான்ஸ் நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த புதிய கவர், மனித தோலின் மென்மை, உராய்வு மற்றும் அழுத்த உணர்வுகளை உணரும் தன்மை கொண்டதாக உள்ளது.
ஸ்கின் கேஸ் சிலிக்கான் மற்றும் UV எதிர்வினை மூலக்கூறுகளில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று தோல் நிறங்களில் வரும் இந்த ஸ்கின் கேஸ் சூரிய ஒளி படும்போது உண்மையான தோலை போன்று அது நிறம் மாறுகிறது.
மக்கள் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்துவதால் வெயிலின் தாக்கம் எந்த அளவு கடுமையானது என்பதை மக்கள் உணரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது இந்த ஸ்கின் கேஸ் விற்பனைக்கு வரவில்லை என்றாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை உருவாக்கியுள்ளனர்.