பல நோயாளிகள் சாப்பிட்ட உடனேயே மருந்து எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் கழித்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனே மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் இது உடல் சூட்டை அதிகரிக்கும். மேலும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச்செய்யும். இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும்.
சாப்பிட்ட உடனேயே மருந்து உட்கொள்வது அஜீரணத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் ஏற்படலாம். எனவே சாப்பிட்ட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில மாத்திரைகள் உணவோடு சேர்ந்து விணைபுரியும் போது நல்ல பலனை தரும். அதுபோன்ற மாத்திரைகளை உணவு உட்கொண்ட 30 நிமிடத்திற்குள் எடுத்துக்கொள்வது நல்லது.
முக்கிய குறிப்பு : மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் பொதுவானவை. இதனை கடைபிடிக்கும் முன் முதலில் உரிய மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.