அதானி குழுமம், இந்திய மருத்துவத் துறையில் பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் தலா 1000 படுக்கையுடன் கூடிய ‘அதானி ஹெல்த்கேர் டெம்பிள்ஸ்’ என்ற புதிய, முழுமையாக ஒருங்கிணைந்த, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.
இதில் மருத்துவ சேவை, கல்வி, ஆராய்ச்சி ஆகியவை ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை முன்னெடுக்க, மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அனைவரும் பங்களிக்க அழைக்கப்பட்டுள்ளனர். “இது ஒரு புரட்சி, வளர்ச்சி அல்ல” என்று கவுதம் அதானி கூறியுள்ளார்.