Saturday, July 12, 2025

விரைவில் தங்கத்தின் விலையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? இப்போது தங்கம் வாங்குவது லாபமா?

தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது அதனுடைய சில்லறை விற்பனை மற்றும் இறக்குமதி ஆகியவை குறைகின்றன. எனவே டிசம்பர் மாதத்தில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் வரலாம் என தகவல்கள் சொல்கின்றன. இந்த காரணத்தால் இப்போது தங்கம் வாங்குவது லாபமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து நடுத்தர மக்களை கவலை அடைய செய்திருக்கிறது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்த ஆண்டு கடைசியில் ஒரு லட்ச ரூபாயை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. இதற்கு உலக அளவில் ஏற்பட்டிருக்கக்கூடிய அரசியல் நிலையற்ற தன்மை முக்கிய காரணமாக இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் குளோபல் மார்க்கெட்ஸ் ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மாதங்களுக்கு 10 கிராம் தங்கத்தின் விலை 96 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 98 ஆயிரத்து 500 ஆகவும் அடுத்த சில மாதங்களில் ஒரு லட்சம் வரையிலும் அதிகரிக்கக்கூடும். ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் மற்றும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக 96 ஆயிரத்து 500 முதல் 98 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆய்வுகளின்படி தங்கத்தில் முதலீடு செய்வது என்பது 28% வரை நல்ல லாபத்தை தருவதாக கூறப்பட்டாலும் தங்கத்தை தற்போது அதிகம் வாங்குவது லாபம் தருமா என்பது அவரவர் சூழ்நிலையை பொறுத்து மாறுபடுகிறது. இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதனை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news