டிராகன் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பெண்களின் உடல்நலத்திற்கு பல்வேறு வகையில் உதவும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்த இழப்பு காரணமாக, பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். டிராகன் பழத்தில் உள்ள இரும்புசத்து இரத்த சோகையைத் தடுக்கவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
டிராகன் பழத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம், வலுவான எலும்புகள், பற்கள், மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைபாட்டை தடுக்கும்.
டிராகன் பழத்தில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, சரும செல்கள் சேதத்தை தடுக்கும். மேலும் இளமை மற்றும் பளபளப்பை தரும்.
இந்த பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்சனைகளை குறைக்கும்.
டிராகன் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
முக்கிய குறிப்பு : மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் பொதுவானவை. இதனை கடைபிடிக்கும் முன் முதலில் உரிய மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.