கடந்த ஜூலை 9 ஆம் தேதி, உலக வரலாற்றில் மிக குறுகிய நாளாக பதிவாகி இருக்கிறது!அன்றைய நாளில் 24 மணி நேரம் என்று கூறப்படும் ஒரு நாளுக்கு 1.3 மில்லிசெகண்டுகள் குறைவாக இருந்தது.அதாவது, பூமி எப்போதும் சுழல்வதை விட விரைவாக சுழல ஆரம்பித்தது!
இதேப் போல அடுத்த 22 ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பூமியின் சுழலும் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று வானியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் பருவநிலை மாற்றம், பெரும் பனிக்கட்டிகள் உருகுவது மற்றும் பூமியின் மையக்கருவில் நிகழும் இயற்பியல் மாற்றங்கள் முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மற்றவர்கள், சந்திரன் பூமியை சற்றே அதிகமாக நெருங்கி வந்ததால், பூமியின் சுழலும் வேகம் அதிகரித்து இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதனால் ஒரு நாளின் நேரம் இன்னும் குறையும் என்று நம்பப்படுகிறது.
இந்த வேகத்தை எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என்று புவியல் மற்றும் வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். இது நம்முடைய பருவ நிலைக்கு, கடல் நிலவரத்திற்கு, மற்றும் பல்வேறு இயற்கை மாற்றங்களுக்கும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றுக் கூறப்படுகிறது.