மத்திய அரசு தபால் அலுவலகங்கள் வாயிலாக பல்வேறு காப்பீடு திட்டங்களையும் வழங்குகிறது. இந்த காப்பீடு திட்டங்கள் குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீடு தொகையை வழங்குகின்றன. இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.355 என்ற குறைந்த பிரீமியம் செலுத்தும் பயனாளிகள், ரூ.5 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும்.
18 முதல் 65 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று, அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ்களை சமர்ப்பித்து, பிரீமியம் தொகையை செலுத்தினால் போதும். விண்ணப்பம் செய்த 5 நிமிடங்களுக்குள், காப்பீடு பாலிசி டிஜிட்டல் முறையில் உங்கள் மொபைலில் கிடைக்கும்.
காப்பீடு தொகை மற்றும் பிரீமியம் விவரம்:
- ரூ.5 லட்சம் காப்பீடு – ரூ.355 பிரீமியம்
- ரூ.10 லட்சம் காப்பீடு – ரூ.555 பிரீமியம்
- ரூ.15 லட்சம் காப்பீடு – ரூ.755 பிரீமியம்
இந்த திட்டத்தில், விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால் முழு காப்பீடு தொகை குடும்பத்துக்கு வழங்கப்படும். இந்த திட்டம் டாடா ஏஐஜி, பஜாஜ் அலையன்ஸ், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் போன்ற தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகிறது.