Saturday, July 12, 2025

இந்தியாவின் BM-04 ஏவுகணை, எதிரிநாடு கிட்டக் கூட நிக்க முடியாது!

இந்தியா, இன்று பாதுகாப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடுகிறது. இந்திய விமானப்படை தற்போது கண்ணோட்டமிடும் புதிய ஏவுகணை, BM-04. இது சாதாரண ஏவுகணையல்ல… இது எதிரியின் மூளையைக் குறிவைத்து தாக்கும், அதி வேக தாக்குதலுக்கான ஆயுதம்.

பிரித்வி (Prithvi missile), ப்ரலே (Pralay) போன்ற ஏவுகணைகளைவிட இது பல மடங்கு மேம்பட்டது. இது மேக் 5 க்கு மேல் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயக்கூடியது. அதாவது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு மீறி செல்லும். இதனால்தான் எதிரியின் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கைக் கூட கொடுக்க முடியாமல் முன்னதாகவே தாக்கப்படுகின்றன.

இந்த BM-04-ன் வடிவமைப்பில் இரு நிலை பூஸ்டர் உள்ளது. அதற்கு மேலே C-HGB என்று அழைக்கப்படும் ஒரு ஹைப்பர்சோனிக் கிளைடு பாடி பொருத்தப்பட்டுள்ளது. இது திட எரிபொருளை பயன்படுத்தி, மிக துல்லியமாக இலக்கை விலகாமல் தாக்குகிறது. அதுவும், வெறும் 30 மீட்டர் பிழை வாய்ப்புடன் – ரொம்ப அபாரமாக தாக்கக் கூடியது.

இதன் தாக்கும் தூரம் 400 முதல் 1,500 கிலோமீட்டர் வரை இருக்கலாம். பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விமான தளங்கள், கட்டளை மையங்கள், அல்லது மொபைல் ஏவுகணை அமைப்புகள் இவை எல்லாம் இதற்கான இலக்குகளாக நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.

10.2 மீட்டர் நீளமும், 1.2 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏவுகணை, கிட்டத்தட்ட 11,500 கிலோ எடையுடையது. இது ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி ஸ்டேடியத்தில் ‘விக்யான் வைபவ் 2025’ கண்காட்சியில் முதல் முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த ஏவுகணையின் வருகை, இந்தியாவின் தாக்குதல்திறனை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது. எதிரி எங்கிருந்தாலும், பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை இந்த ஏவுகணையின் தாக்கும் திறன் குறிக்கிறது. இந்த BM-04 இந்தியாவின் இராணுவ சக்தியின் புதிய முகமாக வளரக்கூடியது….என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news