உலகில் வாழும் அனைத்து உயிர்களும் இந்த பூமியின் இயற்கை மாற்றங்களை பெரும்பாலும் மௌனமாக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இப்போது அந்த மௌனம் வெடித்து, பெரிய மாற்றங்கள் நிகழும் நேரம் வந்துவிட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குளிர்காலங்களில் உருவான பனிக்கட்டிகள் நிலத்தின் மேற்பரப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆனால் தற்போது, மனிதனால் ஏற்பட்ட சூழல் மாற்றங்கள் காரணமாக, அந்த பனிக்கட்டிகள் விரைவாக உருகி வருகின்றன.
இது ஒரு சாதாரண இயற்கை மாற்றமல்ல; அது பூமியின் உள்ளே தூங்கியிருந்த எரிமலை மையங்களை மீண்டும் வெடிக்கச்செய்யும் ஒரு முக்கிய எச்சரிக்கை ஆகும்.
அண்டார்டிகாவில் மட்டும் நூறுக்கும் மேற்பட்ட எரிமலை மையங்கள் உள்ளன. பனிக்கட்டிகள் உருகும் போது, நிலத்துக்கு மேலிருந்த அழுத்தம் குறைந்து, மாக்மா எனப்படும் வெப்பமான கற்கள் விரிவடைவதற்கு வழி ஏற்படுகிறது.
இதனால், எரிமலைகளில் உள்ள வாயுக்கள் – கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் (Methane) போன்றவை – வெளியேற ஆரம்பிக்கின்றன.உதாரணமாக காற்றுடன் நிரம்பிய ஒரு பாட்டிலை திறக்கும் போது அதிலிருந்து வாயுக்கள் வெளியேறும் அல்லவா… அதே விதமான process தான் இங்கேயும் நடைபெறுகிறது.
சிலி, ஐஸ்லாந்து, அலாஸ்கா போன்ற பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகள், பனிக்கட்டிகள் உருகிய பின்னர் எரிமலை வெடிப்புகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.
இது ஒரு தொடர்ச்சியான சுழற்சி போலவே உள்ளது; பனிக்கட்டிகள் உருகுகின்றன → எரிமலை வெடிகின்றது → வெப்பம் அதிகரிக்கிறது → மேலும் பனி உருகுகிறது.
இத்தகைய வெடிப்புகள் சில நேரங்களில் பூமியை தற்காலிகமாக குளிரச் செய்யலாம், ஆனால் நீண்டகாலத்தில் வெளியேறும் கார்பன் வாயுக்கள் உலக வெப்பநிலை உயர்வுக்கு காரணமாகி பல அபாயங்களை ஏற்படுத்தும்.
முந்தைய காலங்களில் அதிகமான பனிக்கட்டிகள் நிலத்தின் மேற்பரப்பில் அழுத்தமாக இருந்து, எரிமலை செயற்பாட்டை கட்டுப்படுத்தி வந்தன. இப்போது அந்த பனிகள் உருகி அழுத்தம் குறைந்ததால், பூமியின் உள்ளே இருந்த சக்திகள் மீண்டும் எழுகின்றன.
இந்த இயற்கை மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமல்ல, மனித வாழ்வை நேரடியாக பாதிக்கக்கூடியவை என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.