விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலேயே முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அன்புமணி மீது கட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணி தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், கட்சியை பலவீனப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பங்கேற்கும் முடிவும், வேட்பாளர்கள் தேர்வு பணியும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்கள் விருப்ப மனு அளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.