Sunday, July 6, 2025

கோடிகளில் டீலிங் கொட்டும் ‘பணமழை’ ‘இன்ஸ்டாவை’ ஆளும் 14 பிரபலங்கள்

16 வருஷத்துக்கு முன்னாடி வெறும் பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம், இன்னைக்கு உலகம் முழுக்க ரொம்ப பிரபலமான சமூக வலைதளமா இருக்கு. காலத்துக்கு ஏத்த மாதிரி தன்னை அப்டேட் பண்ணிக்கிறதால இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தில இன்ஸ்டாவுக்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகமாகிட்டே போகுது.

பாலோயர்ஸ்க்கு ஏத்த மாதிரி பணமும் கொடுக்குறதால, Influencers ஓட சொர்க்கமாவும் இன்ஸ்ட்டா இருக்கு. குறிப்பா அதிக பாலோயர்கள் வச்சிருக்க பிரபலங்கள், இதுல போடுற ஒவ்வொரு போஸ்டுக்கும் கோடிக்கணக்குல பணம் வாங்குறாங்க. அந்த வகையில அதிகமா சம்பாதிக்கிற அதாவது கோடிகள்ல டீல் பண்ற 14 பிரபலங்கள் பத்தி இங்க பாக்கலாம்.

லிஸ்ட்ல பர்ஸ்ட் பிளேஸ் கால்பந்தின் முடிசூடா மன்னன் Cristiano Ronaldoக்கு. 658 மில்லியன் பாலோயர்ஸ் வச்சுருக்க Ronaldo ஒவ்வொரு போஸ்டுக்கும் 27 கோடி ரூபா வாங்குறாரு. இவருக்கு அடுத்த இடத்த கால்பந்தின் மற்றொரு மகாராஜாவான Lionel Messi தக்க வச்சிருக்காரு. 505 million பாலோயர்ஸ் வச்சிருக்க Messi ஒரு போஸ்டுக்கு 22 கோடி வாங்குறாரு.

3வது இடத்துல ஹாலிவுட் நடிகை Selena Gomez 419 மில்லியன் பாலோயர்ஸோட இருக்காங்க. இவங்களும் ஒரு போஸ்டுக்கு 22 கோடி வாங்குறாங்க. சமூக ஆர்வலர், தொழிலதிபர், நடிகைன்னு பன்முக திறமை கொண்ட Kylie Jenner 4வது இடத்துல 393 million பாலோயர்சோட இருக்காங்க. 1 போஸ்டுக்கு இவங்க 20 கோடி வாங்குறாங்க.

5வது இடத்துல குத்துச்சண்டை வீரர் Dwayne Johnson 393 மில்லியன் பாலோயர்ஸ் ஓட இருக்காரு. 1 போஸ்டுக்கு 20 கோடி ரூபா வாங்குறாரு. 6வது இடத்துல இருக்க நடிகை Ariana Grande பாலோயர்ஸ் எண்ணிக்கை 375 மில்லியன். 1 போஸ்டுக்கு இவங்க வாங்குற தொகை 19 கோடி. 356 மில்லியன் பாலோயர்ஸ் ஓட 7வது இடத்துல இருக்கும் சமூக ஊடக பிரபலம் Kim Kardashian 1 பதிவுக்கு 18 கோடி வாங்குறாங்க.

பாடகியும், நடிகையுமான Beyonce Knowles, 311 மில்லியன் பாலோயர்சோட 8வது இடத்துல இருக்காங்க. 1 போஸ்டுக்கு இவங்க சம்பளம் 16 கோடி. 9வது இடம் நடிகை, தொழில் அதிபர்னு கலக்குற Khloe Kardashianக்கு. 302 million பாலோயர்ஸ் வச்சு இருக்க இவங்க 1 பதிவுக்கு 16 கோடி வாங்குறாங்க.

10 வது இடம் பாடகர் Justin Bieberக்கு. 294 million     பாலோயர்ஸ் வச்சிருக்காரு. ஒரு போஸ்டுக்கு சம்பளம் 15 கோடி. 11வது இடம் அமெரிக்க மாடல் Kendall Jennerக்கு. 287 மில்லியன் பாலோயர்ஸ் இருந்தாலும் ஜஸ்டின் பைபர் அளவுக்கு இவங்களும் 15 கோடி சம்பாதிக்குறாங்க. 12வது இடம் நடிகையும், பாடகியுமான Taylor Swiftக்கு. 281 மில்லியன் பாலோயர்ஸ் வச்சு, போஸ்ட் ஒண்ணுக்கு 13 கோடி வாங்குறாங்க.

நடிகை Jennifer Lopez         248 மில்லியன் பாலோயர்சோட லிஸ்ட்ல 13வது இடத்துல இருக்காங்க. 1 போஸ்டுக்கு இவங்க சம்பளம் 13 கோடி ரூபா. புகழ்பெற்ற நடிகர், நடிகை, பாடகர்கள விட விளையாட்டு வீரர்கள் தான் இந்த லிஸ்ட்ட முழுசா ஆக்கிரமிச்சு இருக்காங்க. இந்தியாவுல இருந்து ஒரேயொரு பிரபலமா King Kohli இதுல 14 வது இடத்தை பிடிச்சிருக்காரு.

இந்த லிஸ்ட்ல இருக்க ஒரேயொரு கிரிக்கெட் பிரபலம் இவர் மட்டும் தான். இன்ஸ்டாவுல 274 மில்லியன் பாலோயர்ஸ் வச்சிருக்க விராட், 1 போஸ்டுக்கு 12 கோடி ரூபா சம்பளமா வாங்குறாரு. இது மூலமா கிரிக்கெட் மட்டுமில்ல சமூக வலைதளத்திலும் நான் மாஸ் மஹாராஜா தான்ன்னு, மீண்டும் ஒருமுறை கோலி நிரூபிச்சு இருக்காரு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news