ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் தனது பைக்கிற்கு 400 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பெட்ரோல் நிரப்பியபோது, அரை லிட்டருக்கும் குறைவாக பெட்ரோல் வந்ததாகக் கண்டுபிடித்தார்.
அவருக்கு சந்தேகம் எழுந்ததால், அதே பங்கில் பெட்ரோலை ஒரு பக்கெட் மூலம் அளவை பார்த்தபோது, அளவு குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வாடிக்கையாளர் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பியபோதும், அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.
மீட்டர் கணக்கை மாற்றி, பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் எழுந்துள்ளது.