அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மூன்று அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஜூலை 15ம் தேதி இந்தியாவிற்கு வருவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஹெலிகாப்டர்கள் அதிரடி தாக்குதலுக்காக பயன்படுத்தப்படும் திறன் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் கொண்டவை.
2020ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.5,691 கோடி மதிப்பில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது.
இதில் முதல் கட்டமாக போயிங் நிறுவனம் தயாரித்த 3 ஹெலிகாப்டர்கள் ஜூலை 15க்குள் வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள மூன்று ஹெலிகாப்டர்கள் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.