Friday, July 4, 2025

 ‘நாங்க’ மட்டும் தக்காளி தொக்கா? CSK அடிமடியிலேயே ‘கைவைத்த’ RR

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், கேப்டனுமான சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா? இல்லையா? என்பது தான் CSK ரசிகர்களின் சமீபத்திய கேள்வி. IPL தொடரை பொறுத்தவரை ஏலத்திற்கு முன்பான Trading அணிகளுக்கு பிடித்தமான ஒன்று.

தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை வேறு அணியில் இருந்து பணம் கொடுத்தோ, அல்லது வீரர்களை கொடுத்தோ பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் Trading. IPL தொடர் முடிந்த மறுநாள் ஓபன் செய்யப்படும் Trading ஏலத்திற்கு ஒருவாரம் முன்புவரை அமலில் இருக்கும்.

இதன்கீழ் அணிகள் தேவைப்படும் வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் இந்தமுறையை பயன்படுத்தி தான் வாங்கியது. ஹர்திக்கை வாங்கி கையோடு கேப்டன் பதவியையும் அளித்ததால், அப்போது கிரிக்கெட் வட்டாரங்களில் இந்த விஷயம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதுபோன்ற ஒரு பரபரப்பு தற்போது சஞ்சு சாம்சன் மூலமாக ஏற்பட்டுள்ளது. பொதுவாக சென்னை இதுபோல Trading முறையில் ஆர்வம் காட்டாது. எனவே தான் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சென்னை பேச்சுவார்த்தை நடத்துவது மிகுந்த ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. சாம்சனும் சென்னைக்கு வருவதற்கு ஆர்வமாக தான் இருக்கிறார். ஆனால் ராஜஸ்தான் சற்று முரண்டு பிடிப்பதால், சஞ்சு CSKவிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அஸ்வின், துபே இருவரையும் தருவதாக சென்னை ஒப்புதல் அளித்ததாம். ஆனால் அஸ்வினுக்கு வயதாகி விட்டதாலும், துபே பார்மில் இல்லை என்பதாலும் ராஜஸ்தான் இந்த டீலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

சஞ்சு சாம்சன் போன்ற மதிப்புமிக்க வீரருக்கு பதிலாக, நீங்களும் ருதுராஜ் போல ஒரு வீரரை விட்டுக் கொடுங்கள் என்று நெத்தியடியாக கேட்டு விட்டதாம். இதனால் சென்னை நிர்வாகம் ஆடிப்போய் இருப்பதாக தெரிகிறது. தோனிக்கு பின்னர் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ருதுராஜை விட்டுக் கொடுக்கலாமா? இல்லை பணம் கொடுத்து சாம்சனை வாங்கலாமா? என்று ரூம் போட்டு யோசித்து வருகிறதாம். ஆனால் ராஜஸ்தான் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறதாம். கேப்டனை விட்டுத் தருகிறோம் எனவே ருதுராஜ் தான் எங்களுக்கு ஏற்ற வீரர். இதற்கு ஓகே சொன்னால் சஞ்சு சாம்சன் உங்கள் அணிக்கு வருவார் என்று கட் அண்ட் ரைட்டாக தெரிவித்து விட்டதாம். இதற்கு சென்னையின் பதில் என்னவாக இருக்க போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news