Friday, July 4, 2025

பதிரனாவை கேட்கும் ‘குஜராத்’ கேப்டன் : Dhoniயின் ‘பதில்’ என்ன?

IPL தொடர் முடிந்த மறுநாளே வீரர்களை மாற்றிக்கொள்ளும் Trading ஓபனாகி விட்டது. இதனால் IPL அணிகளின் கவனம் தற்போது Trading பக்கம் திரும்பியுள்ளது. வழக்கத்தை விடவும் அணிகள் இந்தமுறை Trading செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதே முக்கிய காரணமாகும்.

அந்தவகையில் சென்னை அணி Trading முறையில் அஸ்வின், துபே, ஜடேஜா, கான்வே ஆகிய வீரர்களை விடுவிக்க திட்டமிட்டு இருப்பதாக, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தநிலையில் சென்னை அணியின் இளம்வீரரும், தோனியின் பேவரைட் பவுலருமான மதீஷா பதிரனாவை விட்டு கொடுக்குமாறு, குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னையிடம் கோரிக்கை வைத்துள்ளதாம்.

22 வயது பதிரனாவை சென்னை அணி 13 கோடி கொடுத்து தக்க வைத்தது. ஆனால் நடப்பு தொடரில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் பதிரனாவை ஏலத்தில் விட்டு மீண்டும் அணியில் எடுத்துக் கொள்ளலாமா? என்று CSK நிர்வாகம் தீவிர யோசனையில் இருக்கிறதாம். இதற்கிடையே தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவை தருகிறோம், பதிலுக்கு பதிரனாவை விட்டுக் கொடுங்கள் என்று குஜராத் நல்ல ஆபருடன் சென்னைக்கு வலைவிரித்துள்ளது.

ரபாடா அந்த அணியால் ரூபாய் 10 கோடியே 75 லட்சத்துக்கு தக்க வைக்கப்பட்டார். எனவே மீதமுள்ள 2 கோடியே 25 லட்சத்தை குஜராத் கையில் இருந்து கொடுக்குமா? இல்லை இன்னொரு வீரரை சென்னைக்கு விட்டுத்தருமா? என்பது தெரியவில்லை. என்றாலும் ரபாடா அண்மையில் ஊக்கமருந்து புகாரில் சிக்கியதால் சென்னை பதிரனாவை விட்டுக் கொடுத்தாலும், பதிலுக்கு ரபாடாவை எடுப்பது கேள்விக்குறி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news