மகாராஷ்டிர மாநிலம் புனே நகரம் கோந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது இளம்பெண் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ‘வங்கியில் இருந்து கூரியர்’ என கூறி ஒரு மர்ம நபர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். கதவை பூட்டிய பிறகு பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், அந்த நபர், பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்துவிட்டு, “இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன்” என மிரட்டியுள்ளார். இரவு 8.30 மணிக்கு மயக்கம் தெளிந்ததும், அந்த பெண் தனது உறவினருக்கு தகவல் அளித்து, உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனனர்.