ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.