கோவாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னல் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் நேற்று கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் கதவு திடீரென விலகியது.
அதை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அது வைரலானது. அந்த விமானம் புனேவில் தரையிறங்கியதும் சரி செய்யப்பட்டதாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதில் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்றும் விமானம் நிறுவனம் விளக்கம அளித்துள்ளது.