Friday, July 4, 2025

டிரம்ப் கூறிய நல்ல செய்தி : காசாவில் போர் நிறுத்தப்படுமா?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறன. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், காசாவில் 60 நாள் நிறுத்தம் செய்வதற்கான திட்டத்துக்கும் நிபந்தனைகளுக்கும் இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸை ஒழிக்க,பல தாக்குதல்களை மேற்கொண்டு பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும் வாழ்விடங்களையும் இழந்து இடமாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் டிரம்ப் கூறிய தகவல் காசாவில் சற்று நிம்மதியை ஏற்படுத்துயிருக்கிறது.

அவர் கூறியது என்னவென்றால் ,”காசா விவகாரம் குறித்து நமது பிரதிநிதிகள் இஸ்ரேலுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நாள் போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த காலத்துக்குள் போரை முடிக்க அனைத்து தரப்புகளும் இணைந்து முயற்சி செய்வோம். இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏற்காவிட்டால் நிலை மேலும் மோசமாகும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஹமாஸ் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அவர்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராக உள்ளனர் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், இஸ்ரேல், ஹமாஸ் கைதிகள் மற்றும் ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கூறி, போர் நிறுத்தத்தில் உடன்பாடு பெறவில்லை. இதனால், இப்போது போர் நிறுத்தம் சாத்தியமாகவில்லை.

இது வரையிலும் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே 56,000 பேருக்கு மேல் உயிரிழப்புகளும் பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அசாதாரண தாக்குதல் நடத்தி 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 251 பேர் பிணைக்கைதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதற்குப்பின் இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சர்வதேச அமைப்புகள் காசாவில் பசியும், பட்டினியுமான நிலையைப் பார்த்து மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றன. மேலும், இஸ்ரேல்-ஈரான் இடையே கடந்த மாதம் கடுமையான மோதல் ஏற்பட்டது. 12 நாட்கள் தொடர்ந்த வான்வழி தாக்குதலுக்குப் பின்னர், இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர். இதில் அமெரிக்காவின் நடுநிலைப் பங்கு முக்கியமாக இருந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news