“ஒரு நாட்டின் வலிமை அதன் சொத்து, வளம் அல்ல – அதன் பாதுகாப்பு திறன்தான்!
இன்று உலகம் பல்வேறு மோதல்களால் மூடியிருக்கும் வேளையில், சில நாடுகள் தங்கள் இராணுவ சக்தியால் மட்டும் உலக அரங்கில் தலைசிறந்த இடத்தைப் பிடித்துள்ளன.
அந்த வகையில் forbes இதழின் தரவுகளின் அடிப்படையில் ராணுவத்தில் அதிக செலவு செய்து முதல் 10 இடத்தை பிடித்திருக்கும் நாடுகளைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய இராணுவ செலவைச் செலுத்தி வருகிறது. 13,000க்கும் மேற்பட்ட விமானங்கள், 900க்கும் மேலான தாக்குதல் ஹெலிகாப்டர்கள், மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு தளங்களைக் கொண்டிருப்பதன் மூலம், அமெரிக்கா உலகின் இராணுவ ராஜாவாக திகழ்கிறது.
இரண்டாம் இடத்தில் ரஷ்யா. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான ரஷ்யா, அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் முன்னணி வகிக்கின்றது. 126 பில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டுடன், ரஷ்யா இரண்டாம் மிக சக்திவாய்ந்த இராணுவமாக திகழ்கிறது.
மூன்றாம் இடத்தில் சீனா. 266 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டு, சீனா தனது இராணுவத்தை தொடர்ந்து நவீனப்படுத்திக் கொண்டு வருகிறது. மேலும் 2.6 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து, பல ஆயுதங்களை பெற்று வலுவடைந்துள்ளது.
நான்காம் இடத்தில் இந்தியா. 75 பில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டுடன், 2,200 விமானங்கள், 4,600 டாங்கிகள் மற்றும் 295 கடற்படைக் கப்பல்களைக் கொண்ட இந்தியா, உலகின் முன்னணி இராணுவ நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஐந்தாம் இடத்தில் தென் கொரியா. 46 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில், 1,33,000 படை வீரர்களையும், 739 ஹெலிகாப்டர்களையும் உடைய தென் கொரியா, மிகச் சக்திவாய்ந்த இராணுவமாக உள்ளது.
ஆறாம் இடத்தில் ஐக்கிய இராச்சியம். 71 பில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டுடன், வலுவான விமானப்படை மற்றும் தளவாடங்களை கொண்ட ஐக்கிய இராச்சியம் உலகில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஏழாம் இடத்தில் பிரான்ஸ்.47 பில்லியன் அமெரிக்கடாலர் பட்ஜெட்டுடன், அணு ஆயுதங்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட சைபர் வீரர்களைக் கொண்டு பிரான்ஸ், உலகளவில் ஒரு முக்கிய இராணுவ சக்தியாக உள்ளது.
எட்டாம் இடத்தில் ஜப்பான். 57 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடும் ஜப்பான், நவீன ஆயுதங்கள் மற்றும் திறமையான படை வீரர்களைக் கொண்டு இராணுவத்தை வலுப்படுத்தி வருகிறது.
இதில் பிரான்ஸை விட ஜப்பான் அதிக பில்லியன் செலவிடுகிறது. ஆனால் பிரான்ஸ் 7 வது இடத்தில் இருக்கிறது ஜப்பான் 8 வது இடத்தில் இருக்கிறது என்று, உங்களுக்கு கேள்வி வரலாம்.
அதற்கு காரணம் பிரான்ஸ் ஜப்பானை விட குறைவாக செலவு செய்தாலும், அதன் அணு ஆயுதங்கள், கடற்படை, விமானப்படை திறன் மற்றும் உலகளாவிய தாக்கம் அதிகமாக இருப்பதால் Forbes ரேங்கிங்கில் பிரான்ஸ் 7வது இடத்திலும், ஜப்பான் 8வது இடத்திலும் உள்ளது. செலவு மட்டும் ரேங்கிங்கை தீர்மானிப்பதில்லை; மொத்த இராணுவ சக்தியும் முக்கியம்.
ஒன்பதாம் இடத்தில் துருக்கி. 47 பில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டுடன், நேட்டோவில் இரண்டாவது பெரிய படையை கொண்ட துருக்கி, வலுவான இராணுவ சக்தியாக வளர்கிறது.
பத்தாம் இடத்தில் இத்தாலி. 30 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டு, பல்வேறு விமானங்கள் மற்றும் கப்பல்களை இயக்கும் இத்தாலி, உலகின் முன்னணி இராணுவ நாடுகளில் ஒன்று.
இவ்வாறு, இந்த 10 நாடுகள் தங்கள் இராணுவ சக்தியை வளர்த்து, உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் பங்கு வகிக்கின்றன.