இரவில் தூங்கும் போது நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு பொதுவாக ஜீரண மண்டல பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக காரமான உணவுகள், அதிக காற்று விழுங்குதல், வயிற்றில் உப்புசம், எரிச்சல் போன்றவை இதற்கு வழிவகுக்கின்றன. இத்தகைய பிரச்சனைகள் தொடர்ந்தால், உணவு பழக்கங்களை மாற்றி, மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது அவசியம்.
நெஞ்செரிச்சல் வராமல் இருக்க செய்ய வேண்டியவை
காரமான, எண்ணெய் மற்றும் மசாலா உணவுகளை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம். சாப்பிட்ட உடனே படுக்க வேண்டாம். குறைந்தது 2-3 மணி நேரம் கழித்து மட்டுமே படுக்கவும். சிகரெட், மதுபானம் போன்றவற்றை தவிர்க்கவும்.
உடல் எடையை கட்டுப்படுத்தவும். அதிக எடை இருந்தால் அமிலப்பெருக்கம் அதிகரிக்கும்.
அதிகமாக இறுக்கமான உடைகள் அணிய வேண்டாம். வயிற்றை அழுத்தும் உடைகள் அமிலப்பெருக்கத்தை அதிகரிக்கலாம்.