மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார். நேற்று மாணவி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் சந்தியாவை பார்த்தவுடன் அவரை தரையில் தள்ளி, மார்பில் அமர்ந்து, கத்தி கொண்டு கழுத்தை வெட்டினார். இதில் சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் தலையிடவில்லை. மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.