இன்றைய காலத்தில் வேலை செய்து வரும் ஒவ்வொரு ஊழியருக்கும் EPF கணக்கு ஒன்று இருக்கிறது. இது, பணி ஓய்வு, மருத்துவ செலவுகள் அல்லது வீடு வாங்கும் நேரம் போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான சேமிப்பு போல் செயல்படுகிறது. ஆனால் இதுவரை, அந்த பணத்தை திரும்பப் பெறுவது ஒரு பெரிய அதிகாரப்பூர்வ சிக்கலாகவே இருந்தது.
இந்த நிலையை மாற்ற, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது 2025 ஆம் ஆண்டு,சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது EPF 3.0 எனும் புதிய முறையாகும். இது ஜூன் 2025-இல் இருந்தே செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இதன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை UPI மூலமாக நேரடியாக பணம் திரும்பப் பெற முடியும்!
முந்தைய முறையில் ஒவ்வொரு அனுமதிக்கும் நாட்கள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது, ஐந்து லட்சம் ரூபாய் வரை பாதி அளவு பணத்தை 72 மணி நேரத்துக்குள் Automatically approve எனப்படும் தானாக அங்கீகரிக்கும் முறையில் பெறலாம். இதற்காக இனி வேலை கொடுப்பவரின் கையெழுத்தோ, EPFO அலுவலகம் செல்ல வேண்டிய தேவையோ கிடையாது. ஆனால் இவை நடைபெற, முக்கியமாக உங்கள் KYC விவரங்கள் முறையாகப் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது, ஆதார் எண், PAN எண்ணும் வங்கி கணக்கும் உங்கள் UAN எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
முழு தொகையை பெறுவதற்கான தகுதி என்ன தெரியுமா?
அதற்கு, நீங்கள் 58 வயதை கடந்திருக்க வேண்டும், அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலை இழந்திருக்க வேண்டும். இந்த இரண்டு மாத வேலை இழப்பு நிலைக்கேற்ப, 75 சதவீதம் வரை பணத்தை பெற அனுமதிக்கப்படுகிறது. மேலும், நிரந்தரமாக வெளிநாடு செல்லும் ஊழியர்கள் மட்டும் முழு தொகையையும் பெற முடியும்.
பாதி தொகையை எப்போது பெறலாம்? என்றால்,
மருத்துவ சிகிச்சை, திருமணம், கல்வி, வீடு கட்டுதல் அல்லது வீட்டு கடனை திருப்பி செலுத்துவது போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஏழு வருட சேவை கொண்ட நபர், திருமணத்துக்கோ அல்லது கல்விக்கோ காரணமாக தனது பங்களிப்பில் இருந்து 50 சதவீதம் வரை பணத்தை பெறலாம். மருத்துவ செலவுக்காக, ஆறு மாத அடிப்படை ஊதியம் அல்லது பங்களிப்பு மற்றும் வட்டியை சேர்த்து திரும்பப் பெறலாம்.
இந்த பணம் திரும்பப் பெறும் செயல்முறையை, EPFO இணையதளம் அல்லது UMANG செயலி மூலமாக செய்து முடிக்கலாம். அதுமட்டுமல்லாமல், புதியதாக அறிமுகமான திடீர் Instant withdraw முறையில், UPI ID ஐ வங்கிக் கணக்குடன் இணைத்து, நேரடியாக பணத்தை பெறலாம்.
மேலும்,EPF கணக்கில் இருந்து பணம் பெறும் போது, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சேவை செய்திருந்தால், எந்த வரியும் கிடையாது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள் பணத்தை பெறுகிறீர்கள் என்றால், PAN கார்டு இருந்தால் 10% TDS மற்றும் PAN சமர்ப்பிக்காமல் இருந்தால் 30% TDS பிடிக்கப்படும். எனினும், ரூ.50,000க்கு குறைவாக திரும்பப் பெறும் பணத்திற்கு TDS பிடிக்கப்படாது.
இதன் மூலம், EPFO நிறுவனம், ஊழியர்கள் தங்கள் சேமிப்புகளை சரியான தருணத்தில், எளிதாகப் பெற modern technology-யைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
சிறிய சில விவரங்களை சரியாக இணைத்து வைத்தாலே போதும் — EPF பணம் உங்கள் வங்கிக்கு நேரடியாக வந்துவிடும்.